*ஜெபத்தினால் சத்துருவின் காரியம் முறியடிக்கப்பட்டது*
வேத வசனங்கள் : யாத்-19:1, 2நாளா-15:10, 2நாளா-31:7, எஸ்தர்-8:9
மாதம்- மே-ஜூன்; வைகாசி மாதம்
காலம் கோடைகாலம்
விளைச்சல்: கோதுமை அறுவடை,அத்திப்பழம்
3.சீவான் - sivaan
முதற்பலன் பண்டிகை நாளிலிருந்து ஏழு வாரங்கள் எண்ணத்துவக்கி,ஏழாம் ஓய்வு நாளுக்கு மறுநாள் (ஞாயிறு) *50-வது* நாள் சீவான் மாதத்தில் (சீவான்6) *வாரங்களின் பண்டிகை(ஷவோத்)* (அ) *புதிய போஜன பண்டிகை *(பெந்தகோஸ்தே பண்டிகை)* கொண்டாடப்படுகிறது.
*பரிசுத்த ஆவியானவர் பொழிந்தருளப்பட்டார். அப்-2:2) லேவி-23:16,17*
*_சரித்திர நிகழ்வு_*
* மோசேக்கு சீனாய் மலையில் பத்து கற்பனைகள் கொடுக்கப்பட்டது. *யாத்-19,20*
* அகாஸ்வேருவினால் ஆமானின் கடிதம் திருத்தப்பட்டு தேசங்களெங்கிலும் அனுப்பப்பட்டது.
------------------------
*_எஸ்தர்-8:9_*
127நாடுகளையும் அகாஸ்வேரு ராஜா அரசாண்டான். இஸ்ரவேலர்கள் பெர்சியாவிற்கு அடிமைகளாக கொண்டுபோகப்பட்டார்கள்.சூசான் தலைநகரமாக இருந்தது.அப்போது ஆமான் என்பவன் பிரதானியாய் இருந்தான். அவன் யூதர்கள் யாவரையும் அழித்துவிட ராஜாவிடத்திலிருந்து உத்தரவை பெற்றான். ஒரு யூதனும் உயிரோட இருக்க கூடாது என்று சகல தேசத்திற்கும் செய்தி அனுப்பப்பட்டது. அதற்கு ஒட்டுமொத்த அதிகாரிகளும்,பிரபுகளும்,துறைமார்களும் செவிகொடுத்தர்கள்.
அங்கே இருந்த தேவ மனுஷானாகிய மொர்தெகாய் சகல யூத ஜனங்களும் இரவு பகல் மூன்று நாள் ஜெபிக்க வேண்டும் என்றார். அவருடைய வார்த்தைக்கு சகல யூத ஜனங்களும் செவிகொடுத்தார்கள். *அழிப்பதற்கான உத்தரவு பொய் சேருமுன் அந்த இடைப்பட்ட நேரத்திற்குள் தேவசமூகத்திற்கு யூத ஜனங்களுடைய விண்ணப்பம் போய் சேர்ந்தது.*
*__ இதன் ஆவிக்குரிய அர்த்தம்__*
* இரட்சிக்கப்பட்டு தேவனுடைய சபைக்குள் வந்ததான மனிதன் ஜெபிக்கிறவனாக இருக்க வேண்டும்.தேவசமூகத்தில் மன்றாடும் போதும்,விண்ணப்பம் பண்ணும் போதும்,பரிசுத்த ஆவியானவரை நமக்கு தந்து அழிவு எந்த பக்கம் வந்தாலும் அதிலிருந்து தப்பிப்பிழைக்க வேறு வழியாக ஒரு காரியத்தை செய்ய தேவன் நல்லவராக இருக்கிறார்.
*எஸ்தர் - 8:8 சத்துருவினால் ஒரு வார்த்தை அழிக்க புறப்பட்டது.ஆனால் தேவ மனுஷனால் ஒரு வார்த்தை காப்பற்றப் புறப்பட்டது.*
*எஸ்தர்-3:15 சூசான் நகரம் கலங்கிற்று.*
*எஸ்தர்- 8:15 சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்தது.*
0 Comments